இந்த வாரம் தியேட்டர், ஓ.டி.டி ரிலீஸ்- முழு விபரம்..!!

2022-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தமிழ் சினிமாவுக்கு பொற்காலம் என்று கூரலாம். சென்ற ஆண்டு முதல் இப்போது வரை தமிழில் வெளியாகும் பல படங்கள் தொடர்ந்து வெற்றி பட்டியலில் இணைந்து வருகின்றன. இதனால் வாரம் தொடங்கியதும் வெள்ளிக்கிழமை என்ன படம் வெளியாகப்போகிறது? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது. 
 
movies

கடந்த வாரம் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படம் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் மேலும் பல படங்கள் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. அத்துடன் ஏற்கனவே திரைக்கு வந்த படங்கள் சில இந்த வாரம் ஓ.டி.டி-யில் வெளிவருகின்றன. அதுதொடர்பான விபரங்களை விரிவாக பார்க்கலாம்.

குட் நைட்

ஜெய் பீம் படம் மூலம் தமிழ் சினிமாவில் தனித்த அடையாளத்தை பதிவு செய்துள்ள மணிகண்டன் தனி ஹீரோவாக நடித்துள்ள படம் குட் நைட். இந்த படத்தை விநாயக் சந்திரசேகர் இயக்கியுள்ளார். மேலும் ரமேஷ் திலக், மீதா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறட்டை பிரச்னையால் அவதிப்படும் இளைஞரின் பின்னணியை நகைச்சுவையாக பதிவு செய்கிறது குட் நைட். ஏற்கனவே இந்த படத்தின் டிரெய்லருக்கு வரவேற்பு பெற்றதை அடுத்து, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கஸ்டடி

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யா, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். முதல்முறையாக தமிழில் கஸ்டடி மூலம் முழுநீள ஹீரோவாக அறிமுகமாகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அரவிந்த் சாமி, கீர்த்தி ஷெட்டி, ஆர். சரத்குமார், ப்ரியாமணி உள்ளிட்டோ நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் டிரெய்லருக்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், கஸ்டடி படத்தை பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இராவணக் கோட்டம்

மதயானைக் கூட்டம் படம் மூலம் கவனமீர்த்த இயக்குநர் விக்ரம் சுகுமாறன். அவருடைய அடுத்தப்படமாக வெளிவருகிறது ராவணக் கோட்டம்.. சாந்தனு பாக்கியராஜ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் கயல் ஆனந்தி, பிரபு, இளவரசு உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனது திரைவாழ்க்கைக்கு இராவணக் கோட்டம் படம் பெரியளவில் அடித்தளம் போடும் என சாந்தனு பாக்கியராஜ் பெரிதும் நம்பியுள்ளார்.

ஃபர்ஹானா

பெரும் சர்ச்சைக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஃபர்ஹானா’ திரைப்படம் வரும் 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷின் திரைவாழ்க்கைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஓ.டி.டி ரிலீஸ் படங்கள்

சமந்தா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான சாகுந்தல் திரைப்படம் மண்ணை வாரியது. பல கோடிகள் போட்டு எடுக்கப்பட்ட அந்த படம் வெறும் சில லட்சங்களை மட்டும் தான் வசூலித்தது. இந்த படம் வரும் வெள்ளி அன்று பிரைம் வீடியோவில் வெளிவருகிறது. அதேபோன்று அருள்நிதி, பாரதிராஜாவின் திருவின் குரல் நெட்ஃப்ளிக்ஸ் வலைதளத்தில் வெளிவருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி ஹாட்ஸ்டாரில் இந்த வாரம் வெளிவருகிறது.
 

From Around the web