தடுப்பூசி போடாதவர்கவர்களுக்கு அனுமதி கிடையாது: ஆர்.கே. செல்வமணி திட்டவட்டம்..!

 
ஆர்.கே. செல்வமணி

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு பணிகளில் கலந்துகொள்ளக் கூடாது என ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அலை கடுமையாக அதிகரித்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி போடும் பணிகளை அரசு அமைப்பு துரிதப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. வரும் மே 31-ம் தேதி முதல் அனைத்துவிதமான சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகளும் நிறுத்தப்படவுள்ளன.

இந்நிலையில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி வாய்மொழியாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீண்டும் சினிமா படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் போது அனைத்து பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டவர்களுக்கு மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்க அனுமதிக்க படுவார்கள். உடல் உபாதைகளால் தடுப்பூசி எடுத்துக் கொள்ள முடியாதவர்கள் அதற்கான உரிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

From Around the web