அச்சுறுத்தம் கொரோனா: தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விழாவை நடத்த முடிவு..!

 
அச்சுறுத்தம் கொரோனா: தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விழாவை நடத்த முடிவு..!

இந்தாண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை பல்வேறு கட்டுப்பாடுகளில் காணொலி காட்சி மூலம் நடத்த அகெதமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சையின்ஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது.

சினிமாத்துறைக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக வரும் ஏப்ரல் 28-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி இறுதி வரை வெளியான படங்களும் தேர்வு குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அத்துடன் நேரடியாக ஓ.டி.டி தளங்களில் வெளியான படங்களையும் அகெதமி அமைப்பு ஆஸ்கர் போட்டிக்கு எடுத்துக் கொண்டது. அதன்காரணமாக தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படமும் விருதுக்காக போட்டியில் பங்கேற்றது. ஆனால் இறுதிப் பட்டியலில் அந்த படம் இடம்பெறாமல் வெளியேறியது.

இந்தாண்டு டால்பி தியேட்டரில் நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அதோடு லாஸ் ஏஞ்சலஸ் யூனியன் ஸ்டேன்ஷன் அரங்கிலும் நடக்கிறது. விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்வதை தவிர்க்கும் நோக்கில் லண்டன் மற்றும் பாரீஸ் நகரங்களிலும் விருது விழா நடக்கிறது.

கடந்தாண்டைப் போல இந்தாண்டும் தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விழா நடக்கிறது. பரிந்துரை செய்யப்பட்டுள்ள கலைஞர்கள் ரிமோட் லொக்கேஷன்களில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பங்கெற்பார்கள். இந்தாண்டும் மிகவும் வித்தியாசமாக முறையில் நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை காண உலகமே ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளது.

From Around the web