தனுஷ் நடிக்கும் படத்தில் மூன்று கதாநாயகிகள்- விரைவில் அறிவிப்பு..!

 
மித்ரன் ஜவஹர் மற்றும் தனுஷ்

டி 43 படத்தை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்று வந்த ‘தி கிரே மேன்’ படம் நிறைவடைந்த நிலையில் இந்தியா திரும்பியுள்ளார் தனுஷ். தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ‘டி 43’ படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். கார்த்திக் நரேன் இயக்கி வரும் இப்படம் விரைவில் நிறையவடையவுள்ளது.

அதை தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் நடிக்கிறார் தனுஷ். இதற்கிடையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தனுஷ் மற்றும் மித்ரன் ஜவஹர் இப்படம் மூலம் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக இந்த கூட்டணியில் உருவான யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து வெளியாகி ஹிட்டடித்தன. தனுஷ் - மித்ரன் ஜவஹர் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத். இப்படம் தொடர்பான தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web