மூன்று முறை தேசிய விருது வென்ற பிரபல நடிகை மரணம்..!

 
நடிகை சுரேகா சிக்ரி

மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நடிகை சுரேகா சுக்ரி மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருடைய் இழப்பு பாலிவுட் திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1978-ம் ஆண்டு வெளியான ’கிசா குர்சி கா’ என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார் சுரேகா சுக்ரி. அதை தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள், பாலிவுட் படங்களில் அவர் நடித்துள்ளார்.

கடந்த 1988-ம் ஆண்டு வெளியான ‘தமஸ்’ என்கிற படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை முதன்முறையாக வென்றார். அதை தொடர்ந்து 1995-ம் ஆண்டு வெளியான ‘மம்மோ’ என்கிற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அதே பிரிவில் இரண்டாவது முறை அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி தேசியளவில் வரவேற்பு பெற்ற ‘பதாய் ஹோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் சுரேகா சுக்ரி. இந்த படத்தில் நடித்தற்காக மூன்றாவது முறையாக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை அவர் வென்றார்.

சீரியல் ஷூட்டிங்கில் இருந்த போது ஏற்பட்ட விபத்தில சுரேகா சிக்ரிக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.
 

From Around the web