‘தக்லைஃப் படப்பிடிப்பில் பரபரப்பு..!

 
1

சென்னையில் இயக்குனர் மணிரத்னம் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் மட்டும் தான் படப்பிடிப்பை நடத்தி வருவதாகவும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை நள்ளிரவு 12 மணிக்கு மேல் படப்பிடிப்பை நடத்தியதாகவும் அதன் பின்னர் நேற்று அதிகாலை 5 மணிக்கு படப்பிடிப்பு நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே இந்த காட்சிகளில் நடித்து வரும் சிம்பு மற்றும் த்ரிஷா ஆகிய இருவருமே நள்ளிரவு முதல் அதிகாலை வரை படப்பிடிப்பு தளத்தில் இருப்பதாகவும் எப்போது தங்களுடைய காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறும் என்று தருவார்கள் தெரியாததால் இருவரும் விடிய விடிய விழித்திருந்து படப்பிடிப்பிற்காக காத்திருப்பதாகவும் படக்குழு வட்டாரங்களில் இருந்து செய்தி கசிந்துள்ளது.

பொதுவாக சிம்பு பகலில் படப்பிடிப்பு வைத்தாலே சரியாக வரமாட்டார் என்று குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் மணிரத்னம் படம் என்பதால் அவர் நள்ளிரவு மற்றும் அதிகாலையிலும் படப்பிடிப்புக்கு வந்து முழு ஒத்துழைப்பு தந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பொதுவாக மணிரத்னம் படத்தில் இருட்டில் தான் அதிக காட்சிகள் படமாக்கப்படும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்திலும் அதிக காட்சிகள் இருட்டில் படமாக்கப்பட்டு இருப்பதாகவும், குறிப்பாக சிம்பு மற்றும் த்ரிஷாவின் ரொமான்ஸ் காட்சிகள் முழுவதுமே குறைந்த வெளிச்சத்தில் தான் படமாக்கப்பட்டதாக தெரிகிறது.

From Around the web