டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா காதலனுடன் கைது..!!

 
1

டிக்டாக்கை தடை செய்தாலும், சில பிரபலங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் பெருகிகொண்டே செல்கிறது. இதில் சிலர் மீதுதான் மக்களின் வெறுப்பு அதிகமாகி வருகிறது. முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாகவும் அறுவருப்பாகவும் பேசியும் நடித்தும் வருவதே இதற்கு காரணம். 

அப்படிப்பட்ட 2 பேர்தான் ரவுடி பேபி சூர்யா - சிக்கா ஜோடிகள். இருவருக்கும் ஏற்கனவே தனித்தனியாக கல்யாணமானவர்கள். எனினும் தங்கள் குடும்பங்களை மறந்து இவர்கள் ஒன்றாக குடியிருந்தார்கள். அவ்வப்போது ஒன்றாக குடித்தனம் நடத்தினாலும் திடீரென பிரிந்துவிடுகிறார்கள். இவர்கள் நடத்தும் யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசி வருகின்றனர். 

இதனால் இவர்களின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும், இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பெண்கள் அமைப்புகள் பலர் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

surya rowdy

மதுரையில் பதுங்கி இருந்த ரவுடி பேபி சூர்யா - சிக்கா ஆகிய இருவரையும் கைது செய்த தனிப்படை பிரிவு போலீசார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

From Around the web