டிக்கிலோனா சக்ஸஸ் பார்ட்டி: நெட்டிசன்கள் வாயிக்கு அவல்பொரியான சந்தானம்..!

 
டிக்கிலோனா சக்ஸஸ் பார்ட்டி
டிக்கிலோனோ படம் வெளியான மூன்று நாட்களில் படத்துக்கு வெற்றி விழா கொண்டாடப்பட்டுள்ளதற்கு நெட்டிசன்கள் பலர் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

கார்த்தி யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த 10-ம் தேதி வெளியான படம் டிக்கிலோனா. டைம் டிராவலை மையப்படுத்தி நகைச்சுவையாக உருவாகியுள்ள இப்படத்தில் சந்தானம் மூன்று விதமான கெட்-அப்புகளில் நடித்துள்ளார்.

ஏற்கனவே படத்தின் டிரெய்லரில் மாற்றுத்திறனாளிகளை கேளி செய்யும் நகைச்சுவை காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு எழுந்தன. எனினும், திட்டமிட்டப்படி டிக்கிலோனா படம் கடந்த 10-ம் தேதி ஜீ 5 தமிழ் ஓடிடி தளத்தில் வெளியானது.

முன்னதாக சந்தானம் நடித்த ‘பாரீஸ் ஜெயராஜ்’ படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. அதனால் இந்த படத்துக்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்தது. எனினும், டிக்கிலோனோ படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் வெளியான மூன்று நாட்களில் படக்குழுவினர் வெற்றி விழாவை கொண்டாடியுள்ளனர். இதுபோன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

படக்குழு வெளியிட்டுள்ள சக்ஸஸ் பார்ட்டி புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலர், படக்குழுவினர் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால் சந்தானத்தின் வருங்கால படங்களின் வெளியீடு மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மாறுபடுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

From Around the web