இன்று காலை 10:30 மணி வரை தான் டைம் : இத்தனை கோடிகள் கொடுத்தால் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடலாம் ..! 

 
1

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் எதுவும் நடைபெறாததால் இந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது.

இந்த படத்தின் கதை குறித்த பணிகள் 2013ஆம் ஆண்டே தொடங்கி விட்டது…பலரும் இப்படத்தை அதிகம் எதிர்பார்த்து வருகின்றனர்…இப்படத்தின் ரிலீசில் சிறிய சிக்கல் இருபப்தாகவும் சொல்லப்படுகின்றது…அதன் காரணமாக இன்று ரிலீஸ் ஆவது கடினம் என்ற நிலையில் படம் இருக்கின்றது…

இப்படத்தை முதலில் சூர்யாவை வைத்து படமாக்க இருந்தார் கௌதம் அதன் பிறகுதான் விக்ரம் ஹீரோவாக்கப்பட்டார் என்றும் சொல்லலாம்…கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படத்தின் பணிகள் நடைப்பெற்று வந்தது…இதற்கு நடுவில் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களிடமும் கதை சொல்லப்பட்டு இருக்கின்றது…இந்த படம் கபாலி நேரத்திலே பேசப்பட்ட கதையாம்..

இந்நிலையில் படம் வருவது சந்தேகம் ஆகி இருக்கிறது இன்று காலை 10.30 மணிக்குள் 2 கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனத்திற்கு திருப்பி அளிக்க வேண்டும் என கவுதம் வாசுதேவ் மேனனுக்கு உத்தரவிட்டுள்ளது கோர்ட்…அப்படி பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை இந்தியா மற்றும் வெளிநாடுகள் ரிலீஸ் செய்ய கூடாது என சொல்லப்படுகின்றது..


 

From Around the web