திருப்பதி கோவிலில் பி. சுசிலா சாமி தரிசனம் : ரசிகர்களை கவலையடைய செய்த போட்டோ..!

 
1

தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 25,000 அதிகமான பாடல்களை பாடியுள்ளார் பிரபல பாடகி பி.சுசீலா.

பல முன்னணி நடிகர்கள் தனது இனிமையான குரலினால் வெற்றியை கொடுத்த இவர், எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் நடித்த படங்களுக்கு பாடல்களையும் பாடியுள்ளார்.

இவ்வாறு உச்சப் பாடகியாக இருந்த பி.சுசிலா பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அவர் பாடிய பாடல்கள் இடம் பெற்ற படமும் பெரிய அளவில் ரீச் ஆனது.

இந்த நிலையில், தற்போது தனது வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருக்கும் பி. சுசிலா, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்து முடியை காணிக்கை செலுத்தி உள்ளார்.

அதன்படி ஏழுமலையானை வழிபட்ட பின் கோவில் வளாகத்தில் இரண்டு பேரின் துணையுடன் வந்த பி. சுசிலா நாராயண மந்திரம் என்ற பக்தி பாடலை மூச்சு இழக்க பாடி கொண்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது . தற்போது அவர் தொடர்பிலான புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி, அவரது ரசிகர்கள் அவர் நீண்ட காலம் நலமாக இருக்க வேண்டும் என வாழ்த்தி வருகின்றார்கள்.

From Around the web