கிராமத்தானை குணமாதான பாத்துருக்க; கோபப்பட்டு பாத்தது இல்லையே... ‘அண்ணாத்த’ டீசர்..!!

 
1

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸட் சிங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.  படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடலும் கடந்த அக்டோபர் 4-ம் தேதி வெளியாகி பெரிதும் ரசிக்கப்பட்டது.

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் டீசரை நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது .அதே போல் சரியாக மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் வெளியானது.

‘அண்ணாத்த’ படத்தின்  டீசரில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பான சண்டை காட்சிகளில் தோன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.“கிராமத்தானை குணமாதான பாத்துருக்க; கோபப்பட்டு பாத்தது இல்லையே” என்று நடிகர் ரஜினிகாந்த் பேசும் வசனம்  டீசரில் இடம் பெற்றுள்ளது.


 

From Around the web