இன்று சாய் பல்லவி பிறந்த நாள் : மலரே நின்னை காணாதிருந்நால்..!

 
1

நீலகிரி மாவட்டத்தில் பிறந்து கோயம்புத்தூரில் வளர்ந்தவரான சாய் பல்லவி, மருத்துவத்தில் பட்டம் பெற்றவர். ஆனால் மருத்துவராகப் பதிவு செய்துகொள்ளாமல் தன் தாய்வழியாக நடனம் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் தொலைக்காட்சி நடனப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ‘கஸ்தூரிமான்’, ‘தாம்தூம்’ திரைப்படங்களில் பெயரிடப்படாத வேடங்களில் தலைகாட்டியவர் 2015இல் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘பிரேமம்’ மலையாளப் படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். தமிழகத்தில் அந்தப் படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. மலர் டீச்சர் கதாபாத்திரமும் சாய் பல்லவியும் தமிழ் ரசிகர்களின் கனவு தேவதைகள் ஆனார்கள்.

இதையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிப் படங்களிலும் தொடர்ந்து நடித்துவருகிறார் சாய் பல்லவி. சினிமாவைப் பொறுத்தவரை முக லட்சணம் சார்ந்த பெண்களை மட்டுமே கொண்டாடப்படுவார்கள். ஆனால் அவற்றிற்கு மத்தியில் நம்மை சுற்றி இருக்கும் பெண்களைப் போல பருக்கள் நிரம்பிய முகத்துடன் அறிமுகமாகி அழகின் விதிகளை உடைத்தவர் “சாய் பல்லவி”. 

தமிழில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் சாய் பல்லவியை ஹீரோயினாக நடிக்க வைக்க அப்படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் விரும்பினார். ஆனால் படிப்பை காரணம் காட்டி அந்த வாய்ப்பை சாய் பல்லவி மறுத்தார். மலையாளத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்த அவர், தமிழில் தியா படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். மாரி 2 படத்தில் “அராத்து ஆனந்தி”யாக மாஸ் காட்டினார்.இப்படத்தி  இடம் பெற்ற ரௌடி பேபி பாடல் மூலம் பட்டித் தொட்டியெங்கும் அவர் பிரபலமானார். இதன்பின்னர் சூர்யா நடித்த என்.ஜி.கே, பாவகதைகள் கார்கி போன்ற தேர்ச்சியாக கதைகளை கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தெலுங்கிலும் ஷியாம் சிங்க ராய் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கில் நாக சைதன்யாவுடன் இவர் இணைந்து நடித்த ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் மிகுந்த வெற்றிப் பெற்றது.தெலுங்கில் ராணா டகுபதிக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள 'விராட பருவம்' என்கிற திரைப்படம் வருகிற ஜூலை 1ஆம் தேதி வெளியாகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சாய் பல்லவி.சாய் பல்லவி 2008ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ‘ ரியாலிட்டி நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குகொண்டு இறுதி போட்டி வரை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கு சாய் பல்லவி மேலும் பல வெற்றிகளைக் குவித்து சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து சாதனைகளை நிகழ்த்த அவருடைய இந்தப் பிறந்த நாளில் மனதார வாழ்த்துவோம்.
 

From Around the web