ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர.ரஹ்மான்-க்கு இன்று பிறந்தநாள்..!! #HBDARRahman

 
1

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான்.இன்று அவரது 55-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  

சென்னையில் பிறந்து வளர்ந்த ரஹ்மானின் இயற்பெயர் திலீப்குமார். இசை பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்ததன் காரணமாக, குடும்ப பொறுப்பை ஏற்கும் நிலைக்கு ஆளானார். 4 வயதிலேயே இசையை கற்றுக் கொள்ள ஆரம்பித்த ஏ.ஆர். ரஹ்மான் மாஸ்டர் தன்ராஜ் என்பவரிடம் இசையை பயின்றார். பின்னர்11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.

1

1992ஆம் ஆண்டு தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். அதே ஆண்டு வெளியான மணிரத்னத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் அவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.

ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன.

ஒரு ஆஸ்கரையாவது இந்தியர்கள் பெற்று விட மாட்டார்களா என எண்ணிய நிலையில், 2008ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் எனும் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவின் ஆஸ்கர் நாயகனாக மாறினார் ஏ.ஆர். ரஹ்மான்.

இசையை தாண்டி இயக்கம், தயாரிப்பு உள்ளிட்ட பணிகளிலும் கவனம் செலுத்தி வரும் ஏ.ஆர். ரஹ்மான் இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் கனவு, ஆசை ! 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏ.ஆர். ரஹ்மான் சார்!


 


 

From Around the web