பாக்கியலட்சுமி இன்றைய எபிசொட்..! ஈஸ்வரியின் ராஜதந்திரம் வீனா போனதே..! 

 
1

 பாக்கியாவும் கோபியும் ஒண்ணா சேந்து வாழனும் என்றார் ஈஸ்வரி. அதற்கு கோபி கோவப்பட்டு இல்ல அம்மா அது நடக்கவே நடக்காது என்றார். மேலும் ஈஸ்வரி பாக்கியா இல்லாமல் உன்னால கட்டாயமா வாழமுடியாது என்றார். அதோட பாக்கியாவோட சேர்ந்து வாழ்ந்தால் தான் நீ நிம்மதியாய் இருப்ப என்டவுடன் கோபி தனக்கு சம்மதம் பாக்கியா சம்மதிப்பாளோ என்றார்.

ஆனால் அதற்கு பாக்யா சம்மதிக்க மாட்டார் என்று சொல்ல, பாக்யா சம்மதிச்சா உனக்கு ஓகேவா என்று கேட்க கோபி எதுவும் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். அப்போ விடு உனக்கு சம்மதம் என்று எனக்கு தெரிகிறது. இனி பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். மறுபக்கத்தில் பாக்கியாவும் செல்வியும் சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு வந்து ஈஸ்வரி அமர்ந்து இருக்கிறார். அப்போது பாக்கியா தன் மீது கோபமாக இருப்பதால் சமாளிப்பதற்காக இன்னைக்கு சாப்பாடு நல்லா இருந்தது பாக்கியா என்று சொல்கிறார். அதற்கு பாக்யா உங்களுக்கு ஏதாவது செஞ்சு தரவா என்று கேட்க, வேண்டாம் ஆனால் நீ கோவமா இருக்கியா என்று ஈஸ்வரி கேட்க உங்க மேல கோபம் இல்ல வருத்தம் தான் இருக்கு என்று பாக்கியா சொல்கிறார். பிறகு சொந்தக்காரர் ஒருவருடைய கதையை ஈஸ்வரி சொல்கிறார். சொந்தக்காரங்க ஒருத்தங்களோட கணவர் இறந்து போய்விட்டதாகவும் அவர் ரொம்ப கஷ்டப்படுவதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு ஆம்பள துணை கண்டிப்பா பெண்ணுக்கு வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டு ஈஸ்வரியின் பிளானை பாக்யா புரிந்து கொள்கிறார்.

 

உடனே ஆம்பள துணை இல்லாம கண்டிப்பா ஒரு பெண்ணால் வாழ முடியும் என்று சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி இப்ப நான் உங்க மாமா போனதுக்கு அப்புறம் எவ்வளவு கஷ்டப்படுறேன் பார்த்தியா என்று கேட்க, அதற்கு பாக்யா மாமா மாதிரி ஒரு நல்ல மனுஷன் கூட வாழ்ந்துட்டு பிரிஞ்சா கஷ்டமா தான் இருக்கும். ஆனா உங்க பையன் கூட இருந்து பிரிஞ்சதால நான் சந்தோஷமா தான் இருக்கேன் என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு பாக்யா கிட்ட இப்படி பேசினால் சரிப்பட்டு வராது இதற்கு வேற மாதிரி தான் டீல் பண்ணனும் என்று முடிவு எடுக்கிறார். மறுநாள் ஈஸ்வரி செழியன் உடன் கோவிலில் பேசிக் கொண்டிருக்கிறார். அங்கு எழில் வருகிறார். செழியன் என்னடா நீயும் வந்திருக்க என்று கேட்க, இல்லை நான் தான் வர சொன்னேன் என்று ஈஸ்வரி சொல்கிறார். என்ன விஷயம் பாட்டி ஏதாவது பிரச்சனையா என்று கேட்க பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல நான் ஒரு முடிவு பண்ணி இருக்கிறேன் என்று பாக்யாவிற்கும் கோபிக்கும் மீண்டும் திருமணம் செய்து வைக்கும் விஷயம் குறித்து பேச அதற்கு செழியன் அவங்க ரெண்டு பேரும் விருப்பப்பட்டா சேர்ந்து வாழுறதில் எனக்கு விருப்பம் தான் என்று சொல்லியதால் எனக்கு விருப்பம் கிடையாது.

எங்க அம்மாவுக்கு நாங்க இருக்கோம். எங்களுடைய உதவியை அம்மா வேண்டாம் என்று சொன்னா கூட அவங்களுக்கு ஒரு வாழ்க்கை துணை வேணும்னு நினைச்சாங்கன்னா அவங்களுக்கு வேற ஒருவரை நானே முன் நின்று கல்யாணம் செய்து வைப்பேனே தவிர நான் இவர் கூட சேர்ந்து வாழணும்னு சொல்ல மாட்டேன் என்று சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி அது உங்க அம்மா ஆகவே விருப்பப்பட்டு சொன்னா நீ சம்மதம் தெரிவிப்பியா என்று கேட்கிறார். அதற்கு எழில் அம்மா ஒத்துக்க மாட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

From Around the web