சீரியலில் ஹீரோவுக்கு முன்னாள் மனைவியாக நடிக்கும் ஹீரோவின் இந்நாள் மனைவி..!

 
நடிகர் ரஞ்சித் மனைவி ப்ரியா ராமனுடன்

முன்னணி சீரியல் ஒன்றில் ஹீரோவின் முன்னாள் மனைவியாக, ஹீரோவின் இந்தாள் மனைவி நடிக்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் ரஞ்சித் மற்றும் ப்ரியா ஆனந்த். இவர்கள் இருவருக்கும் விவகாரத்து நடந்து, பிறகு மீண்டும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

சினிமாவில் பெரியளவில் வாய்ப்பு கிடைக்காததால் ப்ரியா ராமன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினர். பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் அந்த தொடர், நடிகை ப்ரியா ராமனுக்கு நல்ல பெயரை கொடுத்து வருகிறது.

அவரை தொடர்ந்து அவருடைய கணவர் ரஞ்சித்தும், சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சீரியலுக்கு வந்தார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘செந்தூரப்பூவே’ சீரியலில் அவர் தான் ஹீரோ. நடுத்தர வயது கொண்ட மனைவியை இழந்த ஆண் என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் செந்தூரப்பூவே சீரியலுக்கான புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது. கதாநாயகன் ரஞ்சித்தின் முன்னாள் மனைவி கதாபாத்திரம் என்று ஒரு புகைப்படம் காட்டப்படுகிறது. அதில் நடிகை ப்ரியா ராமனின் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. நிஜ வாழ்க்கையில் கணவன் மனைவியாக இருக்கும் ரஞ்சித் மற்றும் ப்ரியா ராமன் சீரியல் வாழ்க்கையிலும் ஜோடியாக நடிக்கவுள்ள விபரம் இதன்மூலம் தெரியவந்துள்ளது. இது ரசிகர்களிடம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

From Around the web