இந்த ஆண்டு நம்ப வெச்சி ஏமாற்றிய டாப் 10 ஹீரோக்கள்! நம்பர் 1 இடத்தில் யார் தெரியுமா ?
விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ, மழை பிடிக்காத மனிதர்கள், ஹிட்லர் ஆகிய மூன்று படங்களுமே தோல்வியை தழுவின.
நடிகர், இயக்குநராக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி நடித்த இரண்டு படங்கள் வெளியானது. இதில் சிங்கப்பூர் சலூன் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றாலும், விமர்சகர்கள் மத்தியில் சுமார் என்ற விமர்சனத்தையே பெற்றது. இதையடுத்து சமீபத்தில் சொர்க்கவாசல் படம் வெளியானது. உண்மைக்கதையை வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், சில இடங்களில் சொதப்பியதால் ரசிகர்களை தியேட்டர் பக்கம் இழுக்க தவறிவிடடது.
நடிகர் விக்ரம் நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான படம் தங்கலான். இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். இப்படத்தின் டைலாக்குகள் ரசிகர்களுக்கு சரியாக புரியவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதையடுத்து, படம் வசூலில் வெற்றி பெற்றாலும், விமர்சனத்தில் சறுக்கியது.
இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான படம் கேப்டன் மில்லர். இப்படத்தை, அருண் மாத்தேஸ்வரன் இயக்கியிருந்தார். டிரைலரும் டீசரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதை அடுத்து, படம் அந்த அளவிற்கு இல்லை என்ற விமர்சனத்தை பெற்றது. ஜனவரியில் இந்த படம் சொதப்பினாலும் ஜூலை மாதத்தில் வெளியான ராயன் படம் மூலம் தனது வெற்றியை மீட்டெடுத்தார் தனுஷ்.
சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை ஆர்.ரவிகுமார் இயக்கினார். இந்த படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதத்தில் வெளியானது. இதன் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகளே 4 ஆண்டுகளுக்கும் மேல் நடந்ததால் கதை பழசாகி விட்டதாக கூறப்பட்டது. இப்படம் குழந்தைகளை கவர்ந்தாலும், மக்களிடையே நன்றாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் அமரன் படம் மூலம் விட்டதை பிடித்து விட்டார் சிவகார்த்திகேயன்.
நடிகர் ரஜினிகாந்த், நீண்ட வருடங்களுக்கு பிறகு கேமியோ ரோலில் நடித்த படம், லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இந்த படம், பாக்ஸ் ஆபிசிலும் விமர்சனத்திலும் பயங்கரமாக சொதப்பியது. இந்த படத்தின் முக்கிய காட்சிகளை கொண்ட ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதாக ஐஸ்வர்யா கூறியதும் ட்ரோலாக மாறியது. இதனாலேயே இன்னும இப்படத்தை ஓடிடியில் வெளியிடாமல் வைத்திருக்கின்றனர். அடுத்ததாக, அக்டோபர் மாதம் ரஜினியின் வேட்டையன் படமும் வெளியானது. இந்த படத்தில் ரஜினி காவல் அதிகாரியாக நடித்திருந்தார். இதனை டி.ஜே.ஞானவேல் இயக்கியிருந்தார். இப்படத்தின் கதை நன்றாக இருந்தாலும் ரஜினியின் மாஸ் தனம் இல்லாததால் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால், இப்படமும் மக்களை சரியாக சென்று சேரவில்லை.
நடிகர் ஜெயம் ரவிக்கு, 2024ஆம் ஆண்டு திரையுலகிலும் தனி வாழ்க்கையிலும் சறுக்கிய ஆண்டாக இருந்தது. முதலில் இவரது சைரன் படம் வெளியானது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருந்தாலும், அவர்களது கேரக்டருக்கு பெரிதாக அழுத்தம் கொடுத்து எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து, தீபாவளியை முன்னிட்டு இவரது பிரதர் படமும் வெளியானது. இந்த படத்தை ராஜேஷ் இயக்கியிருந்தார். படத்தின் கதையும் டைலாக்கும் பெரிதாக ஈர்க்கும் வகையில் இல்லாததால், இப்படமும் தாேல்வியை தழுவியது.
நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படத்திற்காக ரசிகர்கள் பலர் பல ஆண்டுகளாக காத்துக்கிடந்தனர். ரசிகர்களால் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், மாறாக பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டது. ஏற்கனவே 5 வருடம் பழைய கதை என்பதாலும், சமூகத்திற்கு ஒத்து வராத வசனங்களை கொண்டிருந்ததாலும், இதன் மீது பலர் நெகடிவ் விமர்சன மழையினை பொழிந்தனர்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நாயகனாக இருக்கிறார் கவின். இவர் நடிப்பில் இந்த ஆண்டின் மே மாதத்தில் ஸ்டார் படம் வெளியானது. தியேட்டரில் வெளியான போது ரசிகர்களை கவர்ந்த இந்த படம், ஓடிடியில் வெளியானவுடன் ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. ஆனால் இப்படத்தின் வசூலில் எந்த குறையும் இல்லை. அதே போல சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான படம், ப்ளடி பெக்கர். கதை நன்றாக இருந்தாலும், ரசிகர்களுக்கு புரியாத ப்ளாக் காமெடிகளால் படம் சொதப்பியது. அமரன் படத்துடன் போட்டியிட்டு இப்படத்தை வெளியிட்டதும், இதன் தோல்விக்கு ஒரு காரணமாகும்.
இந்த பெயரை படித்த போதே, இது கங்குவா படத்தை பற்றிய பதிவுதான் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். சிவா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பை தவிர மற்ற அனைத்துமே மோசமாக இருந்ததாக ரசிகர்கள் கலாய்த்தனர்.