கண்ணதாசனின் மிகச்சிறந்த 10 பாடல்கள்!

 
1

திரையுலகில் பாடல் எழுதுவதில் கொடி கட்டிப்பறந்த வித்தகக்கவிஞர் கண்ணதாசனின் 37வது நினைவு தினம் இன்று...அவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே மக்கள் மனதில் இடம்பெற்றவை என்றாலும், அதில் ஆகச்சிறந்த 10 பாடல்களின் தொகுப்பு...

'கள்வனின் காதலி' படத்தில் ”கலங்காதிரு மனமே... உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்ற பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். முதல் பாடலிலேயே கண்ணதாசனுக்கென்று ஒரு தனித்துவத்தை வெளிப்படுத்தினார். 

ஆனந்த ஜோதி படத்தில், 'நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா..' என்ற பாடல் தற்போதும் பெரும்பாலோர் மனதில் தோன்றும் பாடல்...காதல் என்பது அனைத்து தரப்பினருக்கும் உரியது. அது என்றும் அழியாதது என்று கூட சொல்லலாம்..அந்த வகையில் காதலின் வலியை மிக அழகாக வெளிப்படுத்திய அந்த பாடல் இன்றைய இளைஞர்களுக்கும் பொருந்தும் பாடல். 

'மல்லிகை...என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ...' என்ற பாடல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வாணி ஜெயராம் குரலில் காதுக்கு இனிமையாக ஒலிக்கும் அந்த பாடல் அப்போது மிகப்பிரபலம்.. இப்போதும் பெரும்பாலான பாடல் நிகழ்ச்சிகளில் பாடப்படுவது அனைவரும் அறிந்ததே.. 

'கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா, நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா..' என்ற பாடலும் காதலர்களின் உணர்வை வெளிப்படுத்தும் பாடல் தான். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா குரலில் மெலோடியான பாடல். 

ஒரு நண்பன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வரலாற்றில் இன்று வரை கர்ணனைத் தான் சொல்வார்கள். வரலாற்றுபடமான 'கர்ணன்' படத்தில் இடம்பெறும்  "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா.." என்ற பாடல் அன்றும், இன்றும், என்றுமே ட்ரெண்டிங் சாங் தான். சிலர் பகவத் கீதையின் சுருக்கமான ஒரு படைப்பாக இந்த பாட்டை பார்க்கிறார்கள் என்றால் மிகையில்லை..

வானம்பாடி படத்தில் இடம் பெற்றுள்ள,  "கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்...அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்..." என்ற அந்த பாடல் காதலில் தோல்வி அடைந்த ஒருவனின் வலியை அழகாக தன் வரிகளில் வர்ணித்திருப்பார்.. 

கண்ணே கலைமானே... மிகப்பெரிய ஹிட் அடித்த மூன்றாம் பிறை படத்தில், கே. ஜே. ஜேசுதாஸ் குரலில் , இசைஞானி இளையராஜா இசையில் மனதை வருடும் அந்த பாடல்..மெலோடிக்கு சிறந்த எடுத்துக்காட்டு.. 

'சூரியகாந்தி' என்ற படத்தில் 'பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா....' என்ற பாடல் மனிதனுக்கு வாழ்க்கை என்றால் என்ன? எப்படி வாழ வேண்டும் என பாடல் ஒலிக்கும் அந்த 5 நிமிடத்தில் சொல்லிவிடுவார் கவிஞர்... ஒவ்வொரு வார்த்தைகளும் யோசிக்க வைக்கும் அந்த பாடல் கண்ணதாசனின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை..அதிலும் அவர் மேடையில் பாடுவது போல் உள்ள அந்த காட்சிகள் ஒரு சராசரி மனிதனுக்கு அறிவுரை வழங்குவது போல் தான் இருக்கும்...இதுவும் அந்த பாடலுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் ..

'பட்டிக்காடா பட்டணமா' என்ற படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனின் துள்ளல் இசையில் டி.எம்.சௌந்தர்ராஜனின் குரலில் ஆட்டம் போட வைக்கும் 'அடி என்னடி ராக்கம்மா...' பாடல் இன்றும் ராக் சாங்-ஆக உள்ளது. 

அவள் ஒரு தொடர்கதை படத்தில் கண்ணதாசனின் 5 பாடல்களுமே ஹிட் தான்..அதிலும், 'கடவுள் அமைத்து வைத்த மேடை..., தெய்வம் தந்த வீடு..' ஆகிய பாடல்கள் தத்துவப்பாடல்களாக ஜொலித்தன. 

இது போன்று மனதை மயக்கும், வாழ்க்கையின் தத்துவத்தை புரிய வைக்கும் ஆயிரக்கணக்கான பாடல்களை கொடுத்துள்ளார்.  

newstm.in

From Around the web