டாப் ஸ்டார் பிரசாந்துக்கு வீரைவில் இரண்டாவது திருமணம் ?

 
1

இந்தியில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘அந்தாதுன்’ திரைப்படம் மிகப்பெரியளவில் ஹிட்டடித்தது. இந்த படத்தில் ஹீரோவாக நடித்த ஆயுஷ்மான் குரானாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. மேலும் அந்தாதுன் படம் தெலுங்கில் ‘மேஸ்ட்ரோ’ என்கிற பெயரிலும், மலையாளத்தில் ‘பிரம்ஹம்’ என்கிற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இதுதவிர தமிழிலும் இந்த படம் ‘அந்தகன்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. கதாநாயகனாக பிரசாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்ரன், ப்ரியா ஆனந்த், சமுத்திரகனி, ஊர்வசி, வனிதா விஜயகுமார், கே.எஸ். ரவிக்குமார், லீலா சாம்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரசாந்தின் தந்தையும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். 

ஊடகம் ஒன்றுக்கு தியாகராஜன் அளித்துள்ள நேர்காணலில், மகன் பிரசாந்தின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அதன்படி, கடந்த 2005-ம் ஆண்டு பிரசாந்துக்கும் எக்ஸ்போர்ட் தொழிலதிபர் மகளுமான கிரஹலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

ஆனால் கிரஹலட்சுமி ஏற்கனவே பதிவு திருமணம் செய்தவர் என்கிற உண்மை, குழந்தை பிறப்புக்கு பிறகு தான் பிரசாந்த் குடும்பத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரசாந்த், கிரஹலட்சுமியை விட்டு பிரிந்தார். அப்போதைய காலக்கட்டத்தில் இவர்களுடைய விவகாரத்து வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த நேர்காணலில் பிரசாந்தின் இரண்டாவது திருமணம் தொடர்பாக தியாகராஜனிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதுகுறித்து பேசிய அவர், அந்தகன் திரைப்படத்துக்காக பிரசாந்த் மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். இந்த படம் வெளியாகும் அடுத்த மாதம் அவருடைய இரண்டாவது திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும், பிரசாந்த் காதல் திருமணம் செய்திருந்தால் நன்றாக இருந்திப்பாரோ என பலமுறை சிந்தித்துள்ளேன். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்துவிட்டார். பிரசாந்த் தனது மகனை பிரிந்து வாழ்ந்து வருவது தான் மிகவும் கொடுமையானது என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.
 

From Around the web