திடீரென நிறுத்தப்பட்ட விஜய் டிவியின் பிரபல சீரியல்..!!

தமிழில் தொலைக்காட்சி பார்வையாளர்கள் ஆர்வமாக பார்த்து வரும் பிரபல சீரியலின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் ரீமேக்குகள் தான். மற்ற மொழிகளில் தயாராகி ஹிட்டடித்த சீரியல்களின் ரீமேக்குகள் தான் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதேசமயத்தில் தமிழில் வரவேற்பை பெறும் சில தொடர்களும், மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது.

அந்த வரிசையில் வினோத் பாபு, பவித்ரா ஜனனி நடிப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘தென்றல் வந்து என்னை தொடு’. தினசரி மதிய வேளையில் ஒளிபரப்பாகும் இந்த தொடரை தெலுங்கில் ’சிருங்காலி வீச்சென்னே’ என்கிற பெயரில் டப் செய்து ஒளிபரப்பாகிறது. 

எனினும் தமிழ் அளவுக்கு இந்த தொடர் தெலுங்கில் வரவேற்பு பெறவில்லை. அதனால் தென்றல் வந்து என்னை தொடு சீரியலில் தெலுங்கு வெர்ஷன் குறைந்த டி.ஆர்.பி காரணமாக திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அதே வரிசையில் தமிழில் மற்றொரு பிரபல தொடரின் தெலுங்கு டப்பிங் வெர்ஷனும் நிறுத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 

From Around the web