தமிழ் இயக்குநருடன் பாலிவுட்டில் கூட்டணி அமைத்த டாப்ஸி- பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 
ராஷ்மி ராக்கெட் படம்

டாப்ஸி பண்ணு நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஷ்மி ராக்கெட்’ திரைப்படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியாவதை படக்குழு உறுதி செய்துள்ளதை அடுத்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தப்பட் படத்துக்கு பிறகு பாலிவுட் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக மாறியுள்ளார் டாப்ஸி. அவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் ரசிகர்கள் மத்தியிலும், மற்ற திரை பிரபலங்கள் இடையிலும் முக்கிய கவனம் பெறுகிறது.

தற்போது லூப் லாபேடா, டோபாரா, சபாஷ் மிது உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார். இதில் சபாஷ் மிது என்கிற திரைப்படம் தமிழகத்தைச் சேர்ந்தவரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் கேப்டனுமான மிதாலி ராஜின் பயோபிக்காக தயாராகி வருகிறது.

தற்போது இவர் ‘ராஷ்மி ராக்கெட்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் அக்டோபர் 15-ம் தேதி ஜீ 5 தளத்தில் இப்படம் நேரடியாக வெளியாகவுள்ளது. அகர்ஷ் குரானா என்பவர் இயக்கியுள்ள இந்த படத்துக்கு தமிழ் இயக்குநரான நந்தா பெரியசாமி திரைக்கதை எழுதியுள்ளார்.

From Around the web