டோவினோ தாமஸின் ’மின்னல் முரளி’ பட டிரெய்லர் வெளியானது..!
 

 

டோவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள மின்னல் முரளி படத்தின் டிரெய்லர் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் உருவாகியுள்ள மின்னல் முரள் சூப்பர் ஹீரோ படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாசில் ஜோசப் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் முதல்முறையாக டோவினோ சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்தாண்டு படத்தின் ஸ்னீக் பீக் வெளியிடப்பட்டது. அது முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. இதையடுத்து இப்படத்தை மலையாளம் உட்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.

எனினு கொரோனா பெருந்தொற்று காரணமாக இப்படத்தின் வெளியீடு தாமதமானது. தொடர்ந்து இதே நிலைமை நீடித்ததால் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நெட்ஃப்ளிக்ஸ் இந்த படத்துக்கான உரிமையை பெற்றது.

தற்போது மின்னல் முரள் டிரெய்லர் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் படத்தை எதிர்பார்த்து ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
 

From Around the web