நடிகை நந்திதாவின் வீட்டில் நடந்த சோகம்..!

 
நந்திதா ஸ்வேதாவின் மரணம்
தமிழ் மற்றும் கன்னட சினிமாவின் முன்னணி நடிகை நந்திதாவின் தந்தை திடீரென காலமானார். அவருக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் இரங்கல் கூறி வருகின்றனர்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘அட்டக்கத்தி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. பெங்களூருவைச் சேர்ந்த இவர் எதிர் நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் நடித்து கவனமீர்த்தார்.

நடிகர் விஜய்க்கு ஜோடியாக புலி படத்திலும், செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திலும் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தொடர்ந்து கன்னட மொழிப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் தனது தந்தை சிவசாமி (54) கடந்த 19-ம் தேதி உயிரிழந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார். மேலும் அவருடைய மரணம் திடீரென நடந்துவிட்டதாகவும், அவருடைய ஆன்மா அமைதி அடைய அனைவரும் வேண்டுங்கள் என்று மேலும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தந்தையை இழந்துவாடும் நடிகை நந்திதா மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு தமிழ், கன்னட திரையுலகத்தில் ஆறுதல் கூறி வருகின்றனர். அவருடைய பதிவுக்கு கீழ் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web