படப்பிடிப்பின் போது நடிகை சமந்தாவுக்கு நடந்த விபரீதம்..!!

 
1

தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நடிகை சமந்தா, தற்போது நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து வருகிறார். இது தவிர, வெப் தொடரிலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்றும் வரும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நடிகை சமந்தா, சண்டைக் காட்சிகளில் ஈடுபட்டார். அப்போது அவரது கைகளில் காயங்கள், சிராய்வு ஏற்பட்டுள்ளது.

இதனை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப்பக்கத்தில், புகைப்படத்தைப் பதிவேற்றி, சண்டைக் காட்சியின் போது கிடைத்த வெகுமதி என்று குறிப்பிட்டுள்ளார்.

1

திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா, அண்மையில் திரைப்பயணத்தில் 13 ஆண்டுகள் நிறைவுச் செய்ததை உற்சாகத்துடன் பதிவிட்டிருந்த நிலையில், தற்போது கைகளில் காயத்துடன் பதிவிட்டிருப்பது ரசிகர்களைக் கவலை அடையச் செய்துள்ளது.

From Around the web