கார்த்திக் நரேனின் 'நிறங்கள் மூன்று' படத்தின் ட்ரைலர் வெளியானது..!!
இயக்குனர் கார்த்திக் நரேன் அதர்வா வைத்து 'நிறங்கள் மூன்று' படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்தப் படத்தில் சரத்குமார் மற்றும் ரகுமான் ஆகிய இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். டான் அசோக் ஸ்டண்ட் கோரியாகிராபராக பணியாற்றியுள்ளார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
முழுக்க முழுக்க அதீத திரில்லர் சம்பவங்கள் நிறைந்து உருவாகும் இப்படத்தின் எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்துள்ளது. நிறங்கள் மூன்று படத்தில் நிறைய ஆச்சரியமான விஷயங்கள் உள்ளன என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இது ஒரு ஹைப்பர்லிங்க்-டிராமா-த்ரில்லர், அதில் கார்த்திக் நரேனின் டச் இருக்கும். வலுவான பாத்திரங்கள், திருப்பங்கள் உள்ளன என்று படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.