தனுஷின் ‘கலாட்டா கல்யாணம்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

 
1

டைரக்டர் ஆனந்த்.எல். ராய் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் நடிகர் தனுஷ் முதன் முதலில் பாலிவுட்டில் அறிமுகமானார். அதற்கு அடுத்ததாக, அமிதாப் பச்சன், அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் பால்கி இயக்கத்தில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் வாய்பேசாத கலைஞனாக நடித்து அசத்தினார்.

தற்போது மீண்டும் ஆனந்த்.எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘அத்ரங்கி ரே’. இந்த படத்தின் தமிழ் வெளியீட்டிற்கு கலாட்டா கல்யாணம் என பெயரிடப்பட்டுள்ளது.

நடிகை சாரா அலிகான், நடிகர் அக்ஷய் குமார் தனுஷடன் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை டி-சீரிஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், கலர் யெல்லோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் ஆனந்த் எல் ராய், நடிகர்கள் சாரா அலிகான், அக்ஷய் குமார், தனுஷ் ஆகியோர் தங்களது சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர்.

மோஷன் போஸ்டர் வெளியாகி கிட்டத்தட்ட 24 மணி நேரம் கடந்த நிலையில், இந்த படத்தின் இந்தி மற்றும் தமிழ் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘அத்ரங்கி ரே’ படம் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வரும் டிசம்பர் மாதம் 24-ம் நாள் கிறிஸ்மஸ் பாண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.


 

From Around the web