மிகவும் எதிர்பார்க்கப்பட்ட'ராதே ஷ்யாம்' படத்தின் டிரைலர் வெளியீடு..!!

 
1

பிரபாஸ் தற்போது ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நாளுக்கு நாள் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே தான் போகிறது. ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் தென்னிந்திய வெர்ஷனுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ராதே ஷ்யாம் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படம் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் ட்ரைலருக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

From Around the web