பிக்பாஸ் 5-யில் களமிறங்கும் உலக அழகி பட்டம் வென்ற திருநங்கை..!

 
நமீதா பெரியாசாமி
தெலுங்கு பிக்பாஸ் பாணியை பின்பற்றி தமிழ் ரியாலிட்டி ஷோவில் பிரபலமான திருநங்கை ஒருவரை போட்டியாளராக களமிறக்க தயாரிப்புக் குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை ஷகீலாவின் மகளான மிளாவை பிக்பாஸ் சீசன் 5-யில் களமிறக்க நிகழ்ச்சிக் குழு முடிவு செய்துள்ளது. அவருடன் சேர்ந்து மற்றொரு பிரபலமான தமிழ் திருநங்கையை போட்டியாளராக களமிறக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு திருநங்கைகளுக்காக நடைபெற்று மிஸ் சென்னை போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர் நமிதா மாரிமுத்து. தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் அதை தொடர்ந்து ஊடகங்களில் பிரபலமானார்.

தமிழ்நாட்டில் திருநங்கை சமூகத்தினரை பிரதிபலிக்கும் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். கடந்த 2015-ம் ஆண்டு நடந்த மிஸ். கூவாகம் போட்டியில் வெற்றி பெற்ற இவர், 2018-ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியிலும் பங்கெடுத்து வெற்றி வாகை சூடினார்.

அந்த வரிசையில் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான திருநங்கை உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டவர் நமிதா மாரிமுத்து. இவரை பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தால், எல்.ஜி.பி.டி.கியூ.ஐ சமூகத்தை சேர்ந்தவர்களிடம் பிரபலமாகும் என்று நிகழ்ச்சிக் குழு திட்டமிட்டுள்ளது. 

From Around the web