இருச்சக்கர வாகனத்தில் சென்ற பிரபல நடிகருக்கு நேர்ந்த சோகம்..!!

அமெரிக்க படங்களில் நடித்து உலகளவிலான ரசிகர்களை கவர்ந்த மூத்த நடிகர் ட்ரீட் வில்லியம்ஸ் (71) இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
treat williams

கடந்த 1975-ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான படம் ‘டெட்லீ ஹீரோ’. இதில் நடிகராக அறிமுகமான ட்ரீட் வில்லியம்ஸ் மிக சீக்கரமாகவே முன்னணி நடிகராக உயர்ந்தார். அவருடைய நடிப்பில் ‘தி ரிட்ஸ்’, ‘தி ஈகிள் ஹேஸ் லேண்டட்’ போன்ற படங்கள் வெளியாகி, உலகளவிலான பிரபலத்தை அவருக்கு பெற்று தந்தது.

மிலோஸ் ஃபோர்மேன் இயக்கத்தில் 1979-ம் ஆண்டு வெளியான ஹேர் படத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகருக்குரிய கோல்டன் குளோப் விருது ட்ரீட் வில்லியம்ஸுக்கு வழங்கப்பட்டது. இவருக்கு பாம் வான் சாண்ட் என்கிற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில், குடும்பத்தினருடன் நியூயார்க்கில் வசித்து வந்தார்.

கடந்த ஜூன் 12-ம் தேதி டோர்செட் பகுதியில் வேர்மாண்ட் வழி 30 பகுதியில் ட்ரீட் வில்லியம்ஸ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவருடைய வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நடிகர் ட்ரீட் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு ரசிகர்கள், திரை உலகத்தினர் பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.

From Around the web