பிரபல ஹிட் ரீமேக் படத்தில் காமெடி நடிகருக்கு ஜோடியாகும் அஞ்சலி..!
Nov 1, 2021, 13:53 IST
மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற ஹிட் படத்தில் தெலுங்கு ரீமேக்கில் காமெடி நடிகருக்கு அஞ்சலி ஜோடியாக நடிக்கும் விபரம் தெரியவந்துள்ளது.
தமிழில் பூச்சாண்டி படத்தில் நடித்து முடித்துள்ள அஞ்சலி, ராம் இயக்கும் நிவின் பாலி படத்திலும் தெலுங்கில் ராம் சரணை வைத்து இயக்கும் ஷங்கர் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மலையாளத்தில் வெளியாகும் மாபெரும் ஹிட்டடித்த ‘நயட்டு’ படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.
இதில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கதாநாயகன் வேடத்தில் தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற காமெடியனான கருணா குமார் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 - cini express.jpg)