மீண்டும் இணைந்து நடிக்கும் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய்- அதுவும் இந்த படத்தில்..!!

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்கும் அவருடைய 68-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக ஓராண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் உருவாக்கிய கதை மற்றும் திரைக்கதை அஜித்துக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் பிடிக்காமல் போனது.
இதனால் அவர் மாற்றப்பட்டு, அஜித் 68 படத்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு வழங்கப்பட்டது. அதற்கு அஜித்தின் உலக சுற்றுலாவுக்கு சென்றுவிட்டார், இடையில் அவருடைய தந்தை உயிரிழந்தார். இதனால் அஜித் 68 படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வராமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அஜித் - மகிழ்திருமேனி இணையும் படத்துக்கான அறிவிப்பு வெளியானது. மேலும் படத்தின் பெயர் விடாமுயற்சி என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் என்றும், ஒவ்வொரு அஜித்துக்கும் ஜோடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி விடாமுயற்சி படத்தில் கதாநாயகிகளாக நடிப்பதற்கு த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராயிடம் படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருவரும் பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர். அதனால் அவர்கள் இருவரையும் விடாமுயற்சி படத்திற்குள் கொண்டுவந்தால் படத்தின் வியாபாரம் மேலும் விரிவடையும் என படக்குழு விரும்புகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.