அஜித் படத்தில் திரிஷா மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ? 

 
1
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் சமந்தாவின் கேரக்டரில் முதலில் த்ரிஷா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த கேரக்டர் தனக்கு பிடிக்கவில்லை என்றும் நயன்தாரா கேரக்டர் கொடுப்பதாக இருந்தால் நடிக்கிறேன் என்று த்ரிஷா சொன்னதாகவும் அதற்கு விக்னேஷ் இவன் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் அவர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக த்ரிஷா மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் அஜித்தின் அடுத்த படமாக ’குட் பேட் அக்லி’ படத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அனேகமாக இந்த பேச்சுவார்த்தை பாசிட்டிவாக முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ஆதிதி ரவிச்சந்திரன் இரு தரப்பிடமும் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் இவர்கள் இருவரும் நடிப்பார்களா என்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் முதல் படத்தின் டைட்டில் ‘த்ரிஷா இல்லைன்னா நயன் தாரா’ என்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தில் இருவரும் இணைந்து நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இப்பொழுது வரை இருவரும் ’குட் பேட் அக்லி’ படத்தில் நடிப்பது உறுதி செய்யப்படவில்லை என்றாலும் இருவரும் நடித்தால் இந்த படம் நிச்சயம் ஒரு எதிர்பார்ப்புக்கு உரிய படமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் த்ரிஷா தற்போது பல திரைப்படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு ஒப்புக்கொண்டு பிஸியாக இருப்பதால் ஆதிக் ரவிச்சந்திரன் கேட்கும் கால்ஷீட் தேதியை கொடுப்பாரா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயமாக உள்ளது. இருப்பினும் ஏதேனும் அதிசயம் நடந்து த்ரிஷா, நயன்தாரா ஒரே படத்தில் நடிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

From Around the web