சினிமாவில் நடிக்க த்ரிஷாவுக்கு தடை..?

 
சினிமாவில் நடிக்க த்ரிஷாவுக்கு தடை..?

நடப்பு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், முந்தைய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் கலந்துப் பேசி நடிகை த்ரிஷாவுக்கு சினிமாவில் நடிக்க தடை விதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கே. திருஞானம் இயக்கத்தில் த்ரிஷா, நந்தா துரைராஜ், ரிச்சர்ட் ரிஷி, ஏ.எல். அழகப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பரமபதம் விளையாட்டு. இந்த படத்தை 24 ஹவர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனம் தயாரித்துள்ளது.

கடந்த 2020, பிப்ரவரி மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால் இதனுடைய ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. அதற்குள் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் மேலும் தள்ளிப்போனது.

தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், இதற்குமேல் பொறுக்கமுடியாத படக்குழு பரமபதம் விளையாட்டு படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓ.டி.டி-யில் நேரடியாக வெளியிடவுள்ளது. அதன்படி வரும் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்த படம் ரீலிஸாகிறது.

முன்னதாக படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளுக்காக த்ரிஷாவை படக்குவினர் அழைத்துள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தயாரிப்பாளர் த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாது என த்ரிஷா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனால் அதிருப்தி அடைந்த பட தயாரிப்பு நிறுவனம் முந்தைய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என இரண்டிலுமே புகார் தெரிவித்துவிட்டார். இதனால் இரண்டு சங்கங்களும் கூடி பேசி த்ரிஷாவுக்கு சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.

முன்னதாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா மீது தயாரிப்பாளர்கள் சங்கம் தடை வித்தது. ஆனால் அதை அவர் பெரிதாக பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து மாநாடு பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். இதையடுத்து அவர் மீதான தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டு நிலை என்ன என்பதே தெரியவில்லை.

அதனால் த்ரிஷாவிடம் சங்க நிர்வாகிகள் கலந்துப் பேசி இதுதொடர்பாக முறையான தீர்வு எடுக்க வேண்டும் என பரமபதம் பட தயாரிப்பு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. கொரோனா இரண்டாவது அலையால் சினிமா தொழில் மேலும் சங்கடத்தை சந்தித்துள்ளது. இதனால் நடிகர் நடிகையர்களும் தயாரிப்பு தரப்பினரின் சிரமங்களை புரிந்துகொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

From Around the web