சன்னி லியோனை தொடர்ந்து பெட்ரோல் விலையை கிண்டல் செய்த த்ரிஷா..!

 
த்ரிஷா

சமூகத்தில் அரசியல் தொடர்பாக எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த நடிகை த்ரிஷா, தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக ஒரு காரியம் செய்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் சைக்கிள் ஓட்டம் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா. முன்னதாக பெட்ரோல் விலை ரூ. 100 கடந்து வரும் நிலையில், சைக்கிள் ஓட்டி உடலை நலமாக வைத்துகொள்ள நாம் முயற்சிக்க வேண்டும் என நடிகை சன்னி லியோனி தெரிவித்தார்.

அதையே வழிமொழியும் விதமாக நடிகை த்ரிஷா இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நடிகை த்ரிஷா நடிப்பில் அண்மையில் ‘பரமபதம் விளையாட்டு’ படம் சரியாக போகவில்லை.

அதை தொடர்ந்து கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் ரிலீஸுக்காக வரிசைக் கட்டி நிற்கின்றன. இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web