த்ரிஷாவின் ‘கொலை வழக்கு’- வெளியான அறிவிப்பு..!!
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருக்கிறார் த்ரிஷா. இத்தனை ஆண்டுகள் தமிழ் திரைத்துறையில் முன்னணி வரிசையில் காலூன்றி நின்ற நடிகை வேறும் யாரும் கிடையாது.
முன்னணி வரிசையில் இருப்பது மட்டுமில்லாமல், முதன்மையான நடிகர்களுடன் அவர் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து வருகிறார். பொன்னியின் செல்வன், லியோ என நாடே எதிர்பார்க்கும் படங்களில் கதாநாயகியாகவும் இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, லோகேஷ கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளிவரவுள்ளது.

அதற்கு பிறகு ’தி ரோடு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை அடுத்து அவர் நடிக்கும் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிகரம் தொடு மற்றும் தூங்கா நகரம் போன்ற படங்களை இயக்கிய கவுரவ் நாராயணன் அடுத்ததாக ‘கொலை வழக்கு’ என்கிற படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார். பெண்களை மையமாகக் கொண்டு உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 - cini express.jpg)