மீண்டும் 61 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷா..!

 
தெலுங்கில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-எண்ட்ரி கொடுக்கும் த்ரிஷா, மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

தமிழில் பொன்னியின் செல்வன், கன்னடத்தில் புனித் ராஜ்குமார், ம்லையாளத்தில் ராம் ஆகிய படங்களில் த்ரிஷா நடித்து வருகிறது. இதில் ராம் படத்தின் பணிகள் மட்டும் சற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த படத்துக்கான படப்பிடிப்பு எப்போதும் துவங்கும் என்பது தெரியவில்லை.

இதற்கிடையில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து தெலுங்கு சினிமாவில் த்ரிஷா நடிக்கிறார். இந்த படத்தை கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். மேலும் இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக இந்த படத்தில் நடிப்பதற்கு படக்குழு ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. மற்ற படங்களை காரணம் காட்டி வாய்ப்பை அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் தற்போது வாய்ப்பு த்ரிஷாவுக்கு சென்றுள்ளது. முன்னதாக 2016-ம் ஆண்டு வெளியான ‘நாயகி’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார் த்ரிஷா.

ஏற்கனவே பாலகிருஷ்ணாவுடன் 2015-ம் ஆண்டு வெளியான லயன் படத்தில் த்ரிஷா ஜோடியாக நடித்துள்ளார். இந்த செய்தி உறுதியானால் இருவரும் இணையும் இரண்டாவது படமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web