தெலுங்கில் 60 வயது நடிகருடன் ஜோடி சேரும் த்ரிஷா..!

 
நடிகர் பாலகிரிஷ்ணா மற்றும் த்ரிஷா

தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் த்ரிஷா, அடுத்ததாக தெலுங்கில் பிரமாண்டமாக தயாராகும் நடிகர் பாலாகிருஷ்ணாவின் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துக்கு உயர்ந்தவர் நடிகை த்ரிஷா.  எப்போது நயன்தாரா தெலுங்கு சினிமாவுக்குள் பிரவேசித்தாரோ அன்றே அனைத்துமே தலைகீழாக மாறிவிட்டது. மீண்டும் தமிழ் படவுலகிற்கு திரும்பினார் த்ரிஷா. 

அப்போது அசின் இங்கு நம்பர் ஒன் நடிகையாக இருந்தார். அதனால் த்ரிஷாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதற்கிடையில் த்ரிஷாவின் பல்வேறு படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவின. அதனால் சினிமாவில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். அதற்குள் நயன்தாரா முன்னணி நடிகை என்பதை கடந்து, தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமையாக மாறிப்போனார்.

அப்போது வெளியானது அந்த படம் தான் ‘96’. அதுவரை த்ரிஷா இழந்த அத்தனை புகழையும் அவருக்கு ஒன்றாக கொடுத்தது அந்த படம். தமிழில் முதன்முதலாக சிறந்த நடிகைக்கான ஃப்லிம்பேர் விருதை அந்த படம் அவருக்கு பெற்று தந்தது.  தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அவர் நடிக்க தொடங்கினார். 

ஆனால் அவை அனைத்தும் வெளியீட்டு சிக்கல் காரணமாக ரிலீஸாகமால் உள்ளன. ஒடிடி-யில் வெளியான பரமபதம் விளையாட்டு வரவேற்பை பெற தவறிய நிலையில், தற்போது ‘ராங்கி’ படத்தை பெரிதும் நம்பியுள்ளார் அவர்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் த்ரிஷா, அடுத்ததாக தெலுங்கில் தயாராகும் பாலாகிருஷ்ணா படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக 2015-ம் ஆண்டு வெளியான லயன் என்கிற படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்தது குறிப்பிடத்தக்கது.

From Around the web