த்ரிஷாவிற்கு தன் கணவர் இப்படி தான் இருக்க வேண்டுமா..!
Nov 21, 2023, 06:05 IST
நடிகை த்ரிஷாவின் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.இந்நிலையில் தன்னுடைய திருமணம் குறித்து த்ரிஷா முன்னதாக கொடுத்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது…அதாவது திருமணம் செய்யும் நபர் தனது மனதிற்கு பிடித்தவராக கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் திருமணத்திற்கு பிறகு விவாகரத்து செய்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் தனது பேட்டியில் கூறியிருந்தார்…அப்போது ஸ்பெஷல் கருத்தை சொல்லி இருக்கின்றார்..
நடிகர் அஜித்தை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் ஜென்டில்மேன் என்றும் குறிப்பிட்டுள்ள த்ரிஷா, அவர் ஒரு அழகான கணவராகவும் நல்ல ஒரு அப்பாவாகவும் இருப்பதாகவும் அவரை போல ஒருவர் தான் தனக்கு வேண்டும் என சொல்லியுள்ளது இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது..
 - cini express.jpg)