சீராகும் வரை சமாளித்துக் கொள்ளவும்- த்ரிஷா வெளியிட்ட பதிவு..!

 
சீராகும் வரை சமாளித்துக் கொள்ளவும்- த்ரிஷா வெளியிட்ட பதிவு..!

நாடு கொரோனா பிடியில் உள்ளது, நிலைமை சீராகும் வரை மக்கள் சமாளிக்க வேண்டும் என நடிகை த்ரிஷா சமூகவலைதளங்கள் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. 

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதே இந்த பிரச்னைக்கு தீர்வாக அமையும் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் தடுப்பூசி பற்றாக்குறையால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இதனால் மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர்.


இந்நிலையில் நடிகை த்ரிஷா சமூகவலைதளங்கள் வாயிலாக மக்களிடையே கோரிக்கை விடுத்துள்ளார். அதில் தற்போது நாடு கொரோனாவின் கொடூர பிடியில் சிக்கியுள்ளது. அதனுடைய இரண்டாவது அலையால் நமது நாடு தடுமாறி வருகிறது. நிலைமை சீராகும் வரை எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ளுங்கள் என்று த்ரிஷா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

From Around the web