கொரோனா பிரச்னையால் த்ரிஷா எடுத்த திடீர் முடிவு..! 

 
த்ரிஷா

கொரோனா ஊரடங்கு காலத்தில் தன்னை சந்திக்க எந்தவொரு திரை பிரபலங்களும் வரக்கூடாது, தானும் அவர்களை நேரில் சந்திப்பதில்லை என்று முடிவு செய்துள்ளாராம் நடிகை த்ரிஷா.

தமிழ் சினிமாவில் 19 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா தற்போது கர்ஜனை, சதுரங்க வேட்டை- 2, ராங்கி, சுகர், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் ஏறக்குறைய பல படங்களின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டன.

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமான தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மட்டும் பாக்கியுள்ளது. அதனுடைய காட்சிகள் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகே துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகை த்ரிஷாவை அவருடைய ஆழ்வார்பேட்டையில் இருக்கும் வீட்டில் சந்தித்து கதை சொல்ல பல இயக்குநர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். அவர்களிடம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு வருமாறு சொல்லி அனுப்பிவிடுகிறாராம்.

மேலும் திரைத்துறையில் இருக்கும் நண்பர்களையும் வெளி ஆட்களை நேரில் சென்று தவிர்ப்பது என்று முடிவு செய்துள்ளாராம் த்ரிஷா. அதுமட்டுமில்லாமல் கொரோனா பரவல் முழுமையாக முடிவுக்கு வந்த பின்னர் தான் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

From Around the web