ஹேக் செய்யப்பட்ட த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம்..!

 
1

நடிகை த்ரிஷாவின் X வலைத்தளப் பக்கம், சிலரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. முதலில் கிரிப்டோகரன்ஸி குறித்து பதிவு ஒன்று வந்த நிலையில், சில நிமிடங்களிலேயே அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது.

"முதல் முறையாக இதுபோன்ற ஒன்றைச் செய்வதில் நான் உற்சாகமடைகிறேன். நான் எனது சொந்த கிரிப்டோகரன்சியை உருவாக்கி உள்ளேன். இப்போது அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. லவ் யூ ஆல்..." என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த கிரிப்டோகரன்சியை பெறுவதற்கான லிங்க் ஒன்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அந்த பதிவு நீக்கப்பட்ட நிலையில், தற்போது இன்று மாலை 6.23 மணிக்கு மீண்டும் த்ரிஷாவின் X பக்கத்தில் ஒரு சர்ச்சைக்குரிய பதிவு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இதுவும் கிரிப்டோகரன்சி குறித்து பதிவு ஆகும். எனவே, யாரும் அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். தற்போது பதிவிட்டப்பட்ட பதிவில்,"என்னுடைய புதிய கிரிப்டோகரன்சி $KRISHNAN இப்போது சோலானாவில் கிடைக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. Solana என்பது பிளாக்செயின் தளம் ஆகும்.

த்ரிஷா

Trisha X Page Hacked: கிரிப்டோகரன்சியில் இருக்கும் பிரச்னை

இந்தியாவில் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சியை வாங்குவதில் எவ்வித பிரச்னை இல்லை என்றாலும் அதனை நீங்கள் சட்டப்பூர்வமாக பயன்படுத்த முடியாது. அதாவது, கடையில் ஒரு பொருளை வாங்கிவிட்டு அதற்கு நீங்கள் இந்தியாவில் ரூபாயை கொடுப்பது போல், கிரிப்டோகரன்ஸியை பயன்படுத்த முடியாது. மேலும், இதனை நீங்கள் வாங்கினால் செபி மற்றும் ஆர்பிஐ ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் வராது. எனவே, இதில் நீங்கள் ஏமாற்றப்பட்டாலோ அல்லது வேறு சில சிக்கல் எழுந்தாலோ யாரிடமும் சட்ட ரீதியாக முறையிட முடியாது என்பதே இதில் இருக்கும் பெரிய பிரச்னையாகும். மேலும் அந்த லிங்க்கை கிளிக் செய்தால் வேறு சில ஆபத்துகளும் ஏற்படலாம் என்பதால் யாரும் அதை கிளிக் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trisha X Page Hacked: த்ரிஷா விளக்கம்

இதுகுறித்து நடிகை த்ரிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவரது தனது இன்ஸ்டா ஸ்டோரியில்,"எனது X பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அது சரிசெய்யப்படும் வரை அதில் வரும் பதிவுகள் என்னுடையது அல்ல... நன்றி" என குறிப்பிட்டுள்ளார். தற்போது வரை அவரது X பக்கம் ஹேக்கர்களிடம் இருந்து மீட்கப்படவில்லை.

From Around the web