‘திரிஷ்யம் 2’ தெலுங்கு டிரெய்லர் வெளியீடு.. ரசிகர்கள் வரவேற்பு !
 

 
1

2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப், அதனுடைய தமிழ் ரீமேக்கையும் இயக்கினார். பாபநாசம் என்ற பெயரில் வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன், கவுதமி, நிவேதா தாமஸ், கலாபவன் மணி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தற்போது இதனுடைய இரண்டாவது பாகம் மலையாளத்தில் த்ரிஷயம்- 2 என்ற பெயரில் உருவாகியுள்ளது. அதே ஜித்து ஜோசப் இயக்கியுள்ள இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மீனா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக த்ரிஷய்ம் - 2 தயாராகியுள்ளது.

இந்த படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தை போலவே, இரண்டாவது பாகத்திற்கும் மாபெரும் ஹிட்டடித்தது. இதனால் இரண்டாம் பாகத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய திட்டுமிட்டு வருகிறது. அந்த வகையில் மலையாளத்தை அடுத்து தெலுங்கு ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஜீத்து ஜோசப்பே இயக்கியுள்ள இப்படத்தில் வெங்கடேஷ், மீனா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இவர்களுடன் நடிகை நதியா போலீஸ் அதிகாரியும், நடிகை பூர்ணா வழக்கறிஞராக நடித்துள்ளனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் வரும் நவம்பர் 25-ஆம் தேதி ‘திரிஷ்யம் 2’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிடப்பட்டுள்ளது. 
 

From Around the web