தெலுங்கிலும் ஓ.டி.டி-யில் வெளியாகும் த்ரிஷ்யம்- 2..?
Apr 26, 2021, 19:19 IST
தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ள த்ரிஷயம் 2 படம் மலையாளப் பதிப்பை போலவே ஓ.டி.டியில் நேரடியாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெர்றி பெற்ற ‘த்ரிஷ்யம் 2’ அடுத்து உடனடியாக தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. மொத்தமாக 40 நாட்கள் நடத்தப்பட்ட இந்த ஷூட்டிங் முடிக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொரோனா பரவல் காரணமாக மலையாள த்ரிஷ்யம் 2 படம் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியானது. தற்போது நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள சூழலில் தெலுங்கு த்ரிஷயம் 2 படமும் ஓ.டி.டி-யில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 - cini express.jpg)