இணையத்தில் வைரலாகும் டிடிஎஃப் வாசன் வீடியோ..!
 

 
1

சின்னத்திரையில் கூட அதிகமான பிரபலங்கள் தம்மை மேலும் பிரபலப்படுத்திக் கொள்ள பிரபல யூட்யூபர்களை நாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

அந்த வகையில் பைக் ரைட்டுக்களை பதிவிட்டு இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகனாக திகழ்பவர் தான் டிடிஎஃப் வாசன். இவரும் அஜித் போல பைக் ரைடர் ஆக இருப்பதோடு திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் நடித்த மஞ்சள் வீரன் திரைப்படம் ஓரளவு வரவேற்பு பெற்றது.

இவர் வெளியிடும் வீடியோக்களை பார்ப்பதற்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருப்பார்கள். ஆனாலும் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் கூட போன் பேசிக்கொண்டே கார் ஓட்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டு அதற்கு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு டிடிஎஃப் வாசனின் காதலி என நடிகை ஷாலினி சோயாவை பற்றிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்களும் பெருமளவில் ட்ரெண்ட் ஆகியது.

இந்த நிலையில், டிடிஎஃப் வாசலும் அவரது காதலியாக கருதப்படும் ஷாலினி ஷோயாவும் ஒன்றாக குளித்து வீடியோ வெளியிட்ட காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இதை கவனித்த ரசிகர்கள் இந்த நடிகை குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் பங்கு பற்றி வருகிறார் என்பதை கண்டுபிடித்து லைக்குகளை குவித்து வருகின்றார்கள்.

From Around the web