பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய TTF வாசன்..!
இந்த துயர சம்பவத்தில் கேரள அரசுக்கு துணை நிற்கும் விதமாக தமிழ்நாடு அரசு சுமார் 5 கோடி நிவாரணமாக வழங்கி உள்ளது. அதேபோல நடிகர் விக்ரம் 20 லட்சம் ரூபாயும், சூர்யா 50 லட்சம் ரூபாயும், கமலஹாசன் 25 லட்சம் ரூபாயும், பகத் பாஸில் 25 லட்சமும். மம்முட்டி 35 லட்சமும் வழங்கியிருந்தார்கள்.
அத்துடன் பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்ற மோகன் லால் 3 கோடி ரூபாய் நிவாரண நிதியை அள்ளிக் கொடுத்திருந்தார். இந்த தகவல் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் பிரபல யூடியூபர்களுள் ஒருவரான டிடிஎஃப் வாசன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் டிடிஎஃப் வாசன் போலீஸ் கஸ்டடியிலும் இருந்து வருவார். பல இளைஞர்கள் இவரை பார்த்து கட்டு போவதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.
எனினும் தற்போது வாசன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய தகவல் பலருக்கு முன்னுதாரணமாக இருந்துள்ளது. தற்போது அவரின் இந்த செயலுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.