சீரியல் நடிகையை திருமணம் செய்யும் TTF வாசன்..??

பிரபல தொலைக்காட்சி  நடிகையை டி.டி.எஃப் வாசன் திருமணம் செய்யவுள்ளதாக வெளியான தகவலுக்கு, சம்மந்தப்பட்ட நடிகை சமூகவலைதளம் வாயிலாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 
 
TDF Vasan

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி.டி.எஃப். வாசன் பிரபல சமூகவலைதள இன்ஃப்ளூயன்சராக இருந்து வருகிறார். அவருடைய பைக் சாகசம் தொடர்பான வீடியோக்கள் இந்தியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதன்மூலம் அவர் தேசியளவில் கவனம்பெற்றார். 

இதன்மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. முதன்முதலாக அவர் நாயகனாக நடிக்கும் படத்தை செல்அம் என்பவர் இயக்குகிறார். படத்துக்கு மஞ்சள் வீரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாக டி.டி.எஃப் வாசன் சீரியல் நடிகையான சங்கீதாவை காதலித்து வருவதாக செய்திகள் உலா வந்தன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 தொலைக்காட்சி தொடரில் சங்கீதா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

sangeetha

மேலும் சங்கீதாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் நிலையில், தனது மணமகனின் பெயர் ’வி’ என்கிற ஆங்கில எழுத்தில் துவங்கும் என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஏற்கனவே உலா வந்துகொண்டிருந்த சர்ச்சைக்கு தீனி போட்டது போல ஆகிவிட்டது.

இதையடுத்து பலரும் சங்கீதாவையும் டி.டி.எஃப் வாசனையும் டேக் செய்து வாழ்த்துப் பதிவிட துவங்கினர். இந்நிலையில் தனது திருமண பத்திரிக்கையை பகிரிந்து வதந்திக்கு சங்கீதா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதன்படி சங்கீதாவை திருமணம் செய்யும் நபரின் பெயர் விக்னேஷ்.  டி.டி.எஃப் வாசன் கிடையாது. மேலும் வாசன் தனது சகோதரனின் நெருங்கிய நண்பர். அதனால் எனக்கு அவர் அண்ணனை போன்றவர் தான் என்று இன்ஸ்டா பதிவில் சங்கீதா குறிப்பிட்டுள்ளார். 


 

From Around the web