துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ‘குருப்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு..!!

 
1

நடிகர் துல்கர் சல்மான் தமிழ், மலையாளப் மொழிகளில் மிக கவனமாக கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடித்து தமிழில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

தற்போது அவர் அடுத்த படமாக கேரளாவில் புகழ்பெற்ற குற்றாளிகளில் ஒருவரான சுகுமாரா குருப்பின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட ‘குருப்’ திரைப்படம் நவம்பர் 12-ம் தேதி வெளியாக உள்ளது.

துல்கர் தயாரித்த இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, டொவினோ தாமஸ், ஷிவஜித், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் தயாராகி உள்ளது.

இந்நிலையில் துல்கர் சல்மானின் ‘குருப்’ திரைப்படத்தின் விறுவிறுப்பான டிரெய்லர் வெளியாகியுள்ளது.

From Around the web