த்ரிஷாவுக்கு டும்... டும்... டும்..!

 
த்ரிஷா
பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து  த்ரிஷா வேறு எந்த படத்திலும் நடிக்கா ஒப்புக்கொள்ளாமல் இருப்பது, அவருடைய திருமணம் குறித்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் த்ரிஷா. அவர் நடித்த பல படங்கள் இன்னும் ரிலீஸாகமல் உள்ளன. சதுரங்க வேட்டை - 2,’ ‘ராங்கி,’ ‘கர்ஜனை’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ‘ராம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் படத்தின் சில காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட வேண்டியுள்ளன. அதற்கான காத்திருப்பில் படக்குழுவினர் உள்ளனர்.

தற்போதைக்கு த்ரிஷா தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் ஒரு படம் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். விரைவில் இரண்டு படங்களுக்குமான ஷூட்டிங் நிறைவடையவுள்ளது.

மேற்கொண்டு த்ரிஷா வேறு எந்தவித படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை இதனால் அவருக்கு திருமணம் முடிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web