சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் அசீம்- இயக்குநர் யார் தெரியுமா..??

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட அசீம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் படத்தில் இயக்குநர் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
 
azeem

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா என்கிற தொடரில் அறிமுகமானவர் மொகமத் அசீம். அதை தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம், பிரியமானவள், பகல் நிலவு போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானார். அதையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்ற ஆசிம் ‘நிறம் மாறாத பூக்கள்’ என்கிற சீரியலில் நடித்தார்.

அதையொட்டி சன் டிவியின் பூவே உனக்காக சீரியலில் நடிக்க துவங்கிய அசீம், மீண்டும் 2022-ம் ஆண்டு விஜய் டிவிக்கு திரும்பினார். பிக்பாஸ் சீசன் 6-யில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து, தொடர்ந்து அவர் போட்டியில் நீடித்தார். முடிவில் அவர் வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டார்.

இதன்மூலம் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றுள்ள அசீம்,  அடுத்ததாக சினிமாவில் கால்பதிக்க முடிவு செய்துள்ளார். அவர் நடிக்கும் படத்தை பொன் ராம் இயக்குகிறார். சிவகார்த்திகேயன், விமல், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடன் பொன்ராம் பணியாற்றியுள்ளார். இதன்மூலம் வெள்ளித்திரையில் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளார் அசீம்.
 

From Around the web