நவீன் - கண்மணி ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு..!!
 

டிவி சீரியல் நடிகர் நவீனுக்கும் செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
 
navin and kanmani

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘இதயத்தை திருடாதே’ தொடரில் கதாநாயகனாக அறிமுகமானவர் நவீன். அந்த சீரியல் பெரியளவில் வெற்றி அடையவில்லை என்றாலும், நவீனுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. சீரியல் துவங்கிய சில மாதங்களில் அவர் பிரபலமானார்.

இவரும் சன் தொலைக்காட்சியில் வைரல் செய்தி வாசிப்பாளருமான கண்மணியும் காதலித்து வந்தனர். இவர்களுடைய திருமணம் பெற்றோர் சம்மத்துடன் கடந்தாண்டு ஜூன் 12-ம் தேதி சென்னையில் நடந்தது. திருமணமான சில மாதங்களில் கண்மணி கர்ப்பமடைந்தார். 

இந்த தகவலை தம்பதிகள் இருவரும் தங்களுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்தனர். இதற்கு சின்னத்திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்துக்கள் கூறினர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்மணிக்கு கோலாகலமாக வளைகாப்பும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நவீன் - கண்மணி தம்பதி பெண் குழந்தைக்கு பெற்றோர்களாகியுள்ளனர். இந்த தகவலை நடிகர் நவீன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது நவீன் - கண்மணி ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.  
 

From Around the web