சீரியல் நடிகர் ராகுல் ரவி மீது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு..!
Dec 17, 2023, 08:05 IST

சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராகுல் ரவி.இந்த சீரியல் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இதே சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே என்ற சீரியலில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
இத நிலையில் தற்போது இவருடைய மனைவி லட்சுமி நாயர் போலீசில் ராகுல் ரவி மீது புகார் அளித்துள்ளார். அதாவது அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனால் விசாரணைக்கு பயந்து ராகுல் ரவி தலைமறைவாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.